கூத்தனூர் சரசுவதி கோயில்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஓர் இந்துக் கோயில்கூத்தனூர் மகா சரசுவதி கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில் சென்றால் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. கல்விக்குரிய தெய்வமாக கருதப்படும் சரசுவதிக்கு அமைக்கப்பட்டுள்ள தனிக்கோயிலாகவும் கருதப்படுகிறது. இக்கோயிலின் குடமுழுக்கு 2018 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று நடைபெற்றது. ஆலயத்தில் சரசுவதி பூசை விழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
Read article

